ஊரடங்கு கால இரவு உணவுகள்,Lockdown dinner recipes

By | June 8, 2021

 ஊரடங்கு கால இரவு உணவுகள்,Lockdown dinner recipes 

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இல்லத்தரசிகள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தினமும் என்ன சமைப்பது என்பது தான். தினமும் காலை, மாலை மற்றும் இரவு என மூன்று வேளை உணவு வகைகளை சமைப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய வேலை தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் விடுமுறை என்பதால் இக்காலத்தில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளை சமைக்க வேண்டும் அதே சமயம் அந்த உணவு ஆரோக்கியம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமையலை முடிக்க வேண்டும் என்ற சூழ்நிலை வேறு,ஏனென்றால் வெளியே சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்து சமைக்க முடியாது. 

சரி வாங்க பிரண்ட்ஸ் ஊரடங்கு காலத்தில் இரவு நேரத்தில் என்னென்ன ரெசிபி சமைப்பது? எப்படி சமைப்பது என்று பார்ப்போம்!!..

நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தோசை  மிகவும் பிடிக்கும் அந்த தோசையில் ஏராளமான வகைகள் உள்ளது. அதிலும் தக்காளி தோசை மற்ற தோசைகளை விட கொஞ்சம் வித்தியாசமாகவும்,சுவை மிகுந்ததாகவும் இருக்கும். இப்போ தக்காளி தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க!! 

1.தக்காளி தோசை 

தேவையான பொருட்கள் :

*இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி :1கப்

*உளுந்து:2ஸ்பூன்

*வெந்தயம் :1/2ஸ்பூன்

*தக்காளி :200கிராம்

*மிளகாய் வத்தல் :5

*சீரகம்:1ஸ்பூன்

*கருவேப்பிலை :சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 

*மல்லி இலை பொடியாக நறுக்கியது :சிறிதளவு 

*உப்பு தேவையான அளவு 

*எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

*அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 5மணிநேரம் ஊறவைத்து அதை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மிளகாய் வத்தல், சீரகம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். 

*அரைத்த மாவில் நறுக்கிய மல்லி இலை, கருவேப்பிலை ,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

*அரை மணி நேரம் கழித்து தோசை கல்லில் மெல்லிய தோசை ஊற்றி எடுக்கவும். 

*சுவையான தக்காளி தோசை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டா செம்ம டேஸ்ட்டா இருக்கும் 😀.

2.கோதுமை மாவு பூண்டு பராத்தா(garlic partha) :

தேவையான பொருட்கள் :

*கோதுமை மாவு :1கப்

*பூண்டு துருவியது  :1டேபிள் ஸ்பூன் 

*மல்லி இலை பொடியாக நறுக்கியது :2டேபிள் ஸ்பூன் 

*உப்பு தேவையான அளவு 

*வெண்ணெய் உருகியது :1டேபிள் ஸ்பூன் 

செய்முறை :

*ஒரு பவுலில் கோதுமை மாவு, பூண்டு துருவல், மல்லி இலை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். அதில் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

*ஒரு நான்ஸ்டிக் பேனில் கோதுமை மாவு எடுத்து தோசை  ஊற்றி மீடியம் பிளேமில் (medium flame) வேக வைக்கவும். தோசை வேகும் பொழுது தோசைக்கரண்டியை வைத்து பிரஸ் பண்ணவும். அப்போது தோசை உப்பி வரும். அதே போல தோசையின் இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். 

*சுவையான கோதுமை மாவு பூண்டு பராத்தா ரெடி!! 

 3.Instant கோதுமை தோசை :

தேவையான பொருட்கள் :

*கோதுமை மாவு :1கப்

*அரிசி மாவு :1/2கப்

*தண்ணீர் :3to4கப்

*பெரிய வெங்காயம் :1பொடியாக நறுக்கியது 

*பச்சை மிளகாய் :1 பொடியாக நறுக்கியது 

*சீரகம் :1/2டீஸ்பூன்

*உப்பு தேவையான அளவு 

*மிளகாய் பொடி :1/2டீஸ்பூன்

*கருவேப்பிலை மல்லி இலை பொடியாக நறுக்கியது :1/2கப்

*எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

*ஒரு பவுலில் கோதுமை மாவு, அரிசி மாவு, சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை ,பச்சை மிளகாய், சீரகம், உப்பு, மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ரவா தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலக்கவும். 

*ஒரு தோசைக் கல்லில் எண்ணெய் தடவி ரவா தோசை எப்படி ஊற்றுவோமோ அதே போல மெல்லிய தோசை ஊற்றி தோசையை சுற்றி எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

*crishpyயான tastyயான கோதுமை தோசை ரெடி!! தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டா செம்ம டேஸ்ட்டா இருக்கும். 

4.மேத்தி சப்பாத்தி (வெந்தயக்கீரை) :

தேவையான பொருட்கள் :

*கோதுமை மாவு :1கப்

*கடலைமாவு :2டேபிள் ஸ்பூன்

*மிளகாய் பொடி :1/2டேபிள் ஸ்பூன் 

*மிளகு பொடி :1/2டீஸ்பூன்

*மஞ்சள் தூள் :1/2டீஸ்பூன்

*சீரகம் :1/2டீஸ்பூன்

*ஓமம் :1/2டீஸ்பூன்

*சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது 

*பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது :1

*மல்லி இலை பொடியாக நறுக்கியது  :சிறிதளவு 

*தயிர் :1டேபிள் ஸ்பூன் 

*வெந்தயக்கீரை :1கப்

*உப்பு தேவையான அளவு 

*எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை :

*ஒரு பவுலில் கோதுமை மாவு, கடலைமாவு, மிளகாய் பொடி, மிளகு பொடி, மஞ்சள் தூள், சீரகம், ஓமம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லி இலை, தயிர், உப்பு, வெந்தயக்கீரை,1டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

*அரை மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். அந்த உருண்டைகளை சப்பாத்திக்கட்டையில் தேய்த்து தோசை கல்லில் போட்டு மிதமான சூட்டில் சுட்டெடுக்கவும். 

*சுவையான, சத்து நிறைந்த வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்!! 

என்ன பிரண்ட்ஸ் ஊரடங்கு கால இரவு உணவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் உபயோகமாய் இருந்ததல்லவா? நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்!! 

மீண்டும் இன்னும் ஒரு பதிவில் சந்திப்போம் நன்றி!!

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *