ஊரடங்கு கால மதிய உணவுகள்,Lockdown Lunch Ideas

By | May 26, 2021

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இல்லத்தரசிகள் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சினை தினமும் சமையல் செய்வது. காலை மாலை இரவு என மூன்று வேளை உணவு வகைகளை சமைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மாலை உணவு வகைகளை சமைப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 

இங்கு ஒரு சில மாலை உணவு வகைகளை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம்!

1.மாங்காய் சாதம் :

மாங்காய் என்றால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பொதுவாக மாங்காயை ஊறுகாய் தான் போடுவார்கள். ஆனால் அது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. எனவே மாங்காயைக் கொண்டு ஆரோக்கியமாக சமைப்பதற்குத்தான் இந்த ரெசிபி. மாங்காய் சாதம்  மாலை உணவாக மிகவும் சுலபமாக செய்ய முடியும். இதை செய்வதற்கு அதிகமான பொருட்கள் எதுவும் தேவையில்லை. 

சரி வாங்க சுவையான மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

*சாதம்-1கப் 

*மாங்காய் (துருவியது) -1/2கப்(மாங்காய் புளிப்பிற்கு  ஏற்ப அளவு மாறுபடும்) 

*காய்ந்த மிளகாய் -5

*மஞ்சள் தூள் -தேவையான அளவு 

*பெருங்காயத்தூள் -தேவையான அளவு 

*வேர்க்கடலை -1/4கப்

*வெந்தயத்தூள் -1ஸ்பூன்

*இஞ்சி -1ஸ்பூன்(பொடியாக நறுக்கியது) 

*பூண்டு -1ஸ்பூன்(பொடியாக நறுக்கியது) 

*கடுகு -1ஸ்பூன்

*உளுந்து-1ஸ்பூன்

*கறிவேப்பிலை தேவையான அளவு 

*மல்லி இலை பொடியாக நறுக்கியது 

*உப்பு தேவையான அளவு 

*நல்லெண்ணெய் தேவையான அளவு 

செய்முறை :

1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சேர்த்து கடுகு  உளுந்து சேர்த்து கடுகு பொறிந்த உடனே நிலக்கடலை சேர்க்கவும். 

2.பிறகு காய்ந்த மிளகாய்,இஞ்சி,பூண்டு ,கறிவேப்பிலை ,பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து வதக்கவும். 

3.துருவிய மாங்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். மாங்காய் புளிப்பு அதிகமாக இருந்தால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

3.அடுப்பை அணைத்த பிறகு மாங்காய் கலவையுடன் வேகவைத்த சாதம்  சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

4.பிறகு நறுக்கிய மல்லி இலைகளைத் தூவி விடவும். 

5.சுவையான மாங்காய் சாதம் ரெடி. 

6.இதற்கு Side dish ஆக  தேங்காய் சட்னி மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடுங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். 

சரி வாங்க சுவையான தேங்காய் சட்னி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்! 

2.தேங்காய் சட்னி :

தேவையான பொருட்கள் :

*தேங்காய் துருவல் 1கப் 

*பச்சை மிளகாய் -2

*சின்ன வெங்காயம் -2

*இஞ்சி -1சிறிய துண்டு 

*கறிவேப்பிலை சிறிதளவு 

*உப்பு தேவையான அளவு

செய்முறை :

1.ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரகரப்பாக அரைக்கவும். 

2.சுவையான தேங்காய் சட்னி ரெடி! அரைத்த சட்னிக்கு தாளிக்க வேண்டியதில்லை. 

3.மாங்காய் சாதத்திற்கு side dish தேங்காய் சட்னி ரெடியாகி விட்டது. அடுத்து உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாம் வாங்க! 

3.உருளைக்கிழங்கு பொரியல் :

தேவையான பொருட்கள் :

*உருளைக்கிழங்கு சிறியது -2 (பொடியாக நறுக்கியது )

*மிளகாய் பொடி -1ஸ்பூன்

*மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்

*சீரகம் -1/2ஸ்பூன்

*கடுகு -1/2ஸ்பூன்

*கறிவேப்பிலை- தேவையான அளவு 

*உப்பு தேவையான அளவு 

*எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை :

1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சேர்த்து கடுகு பொறிந்த உடனே சீரகம் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்க்கவும். 

2.பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்க்கவும்.இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் பொடி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். 

3.உருளைக்கிழங்கு வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். 

4.சுவையான உருளைக்கிழங்கு பொரியல் ரெடி! 

என்ன பிரண்ட்ஸ் இந்த ஊரடங்கு காலத்தில் மாலை உணவு மாங்காய் சாதம், தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடுங்க! இந்த combination உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *