தொப்பையை குறைக்கும் மூச்சு பயிற்சி முறையாக செய்வது எப்படி?

By | May 26, 2021

‘தொப்பை’ உள்ளவர்கள் இந்த மூச்சுப்பயிற்சியைசி தீவிரமாக செய்வதன் மூலம் ‘தொப்பை’ நன்றாக குறைத்து ‘சிலிம்’ மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.
தொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி?
ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல் எளிய வழியில் பக்க விளைவு இல்லாத உடலை ‘சிலிம்’மாக வைக்கும் வழியைத்தான் அனைவரும் விரும்புவர். பணம் கொடுத்துவிட்டலோ, பணம் செலவழித்து விட்டாலோ உடல் ஆரோக்கியம் வந்து விடாது. உங்கள் உடலை நீங்கள் தான் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

எவ்வளவுகெவ்வளவு அதிக நேரம் மூச்சை அடக்கி வைத்திருகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலில் தெம்பு இருக்கின்றது என்று அர்த்தம். குறைந்தது 5 அல்லது 10 வினாடிகள் வரை மூச்சை அடக்கி வைத்திருந்தால் உடல் பலம் நல்லநிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.சிலர் குறிப்பாக நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 60 வினாடிக்கும் மேலாக மூச்சை அடக்கி வைத்திருப்பார்கள்.

இந்த பயிற்சியில் மூச்சை வயிற்றை சுருக்கி உள்ளே இழுப்பதால் ‘தொப்பை’ என்கிற பேச்சுக்கு இடம் ஏதுமில்லை. அப்படி ‘தொப்பை’ உள்ளவர்கள் இந்த பயிற்சி தீவிரமாக செய்வதன் மூலம் ‘தொப்பை’ நன்றாக குறைத்து ‘சிலிம்’ மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

மூச்சிப்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று உடலின் முளைக்கும் மற்ற பகுதிக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக எடுத்துச்சென்று புத்துணர்ச்சியை தருகிறது.

நடை பயிற்சி, யோகா, தியானம், ஒலி ஒளி யோகா, உடற்பயிற்ச்சி மற்றும் மூச்சு பயிற்சி. இவற்றில் மிக மிக எளிதானதும், எந்த இடத்திலும், எந்த வயதினருக்கும் குறைந்த நேரத்தில் சிறந்த பலனும், இலகுவானதும் இருப்பது இந்த மூச்சு பயிற்சி தான்.

 பயிற்சியின் போது பின்பற்ற வேண்டியவை :

ஒவ்வொரு முறை வயிற்றை சுருக்கி மூச்சு இழுக்கும்போது குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை நீளமாக மூச்சை மெல்ல மெல்ல இழுக்க வேண்டும்.பிறகு குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை அடக்கி வைத்திருக்க வேண்டும்.அதேபோல் குறைந்த்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை நீண்டு மெல்ல மெல்ல விடவேண்டும்.

இனி மூச்சு பயிற்சிக்கு தயாராயிருங்கள்.

முதல் பயிற்சி : இரு துவாரங்கள் வழியாக

1. ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.

2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரலையும்

3. இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.

4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .

5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.

இரண்டாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மட்டும்

1. கட்டை விரலால் (படத்தில் காட்டியபடி) வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மட்டும்

 1. சுண்டு விரலால் (படத்தில் காட்டியபடி) இடது துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம் வழியாக மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

நான்காவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து இடது துவாரம் வழியாக

1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.

ஐந்தாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மூச்சை இழுத்து வலது துவாரம் வழியாக

1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.

இந்த 5 பயிற்ச்சியும் முடிந்த பிறகு

சாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து, அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும். இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.இப்போதது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.

தினமும் இந்த பயிற்சியினை செய்யும் போது புது தெம்பை உணர்வீர்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *