சென்னை வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 பிஎஸ்என்எல் புது சலுகை அறிவிப்பு

By | August 16, 2020

பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிவித்து உள்ளது.

சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிவித்து உள்ளது. புதிய சலுகை 80 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இதில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை மற்ற வட்டாரங்களில் வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த இரு வட்டாரங்களில் ரூ. 399 மற்றும் ரூ. 1699 சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய ரூ. 399 பிரீபெயிட் சலுகை ஆகஸ்ட் 15 ஆம்  தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்என்எல் சென்னை ரூ. 399 மற்றும் ரூ. 1699 சலுகை நீக்கப்படுவது குறித்த அறிவிப்பை தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ரூ. 399 சலுகை பற்றிய தகவலும் இடம்பெற்று உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 39 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த சலுகையில் வழங்கப்படும் தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்பட்டு விடும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளூர் மற்றும் வெளியூர் ரோமிங்களில் தினமும் 250 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். அதன்பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

1Shares
Total Page Visits: 66 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *