கொரோனாவால் திணறும் கோவை… நிரம்பும் மருத்துவமனைகள்!

By | July 4, 2020

கோவையில் 74 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் 74 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தாண்டியது.

கோவை குனியமுத்தூர், குறிச்சி, போத்தனூர் பகுதியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்கள் சமீபத்தில் அவினாசி சாலையில் உள்ள துணிக்கடையில் மகளின் திருமணத்திற்காக துணிகள் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதே பகுதியை சேர்ந்த இருவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவை மயில்கல் நியூயார்க் அவென்யூ அருகில் உள்ள அழகு நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நில அளவையர் மற்றும் அவரது மனைவி இவருக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த கணவன்(30), மனைவி(26) இருவர் மற்றும் அவர்களுடைய உறவினருடைய 5 வயது குழந்தை மூன்று பேருக்கும் இன்று கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிச்சி NP இட்டேரி பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை சுற்றுவட்டார பகுதியில் மொத்தம் 74 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0Shares
Total Page Visits: 67 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *