டிக்டாக் அப்பிளிக்கேஷனின் வசதியை நகல் செய்து வெளியிடும் Snapchat

By | August 16, 2020

மிகவும் பிரபல்யமான டிக்டாக் வீடியோ அப்பிளிக்கேஷனின் வசதி ஒன்றினை நகல் செய்து தனது அப்பிளிக்கேஷனில் Snapchat வெளியிடவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இதன்படி Discover பக்கத்தினை நகல் செய்து வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் டிக் டாக் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தும் அனுபவம் இதன் ஊடாகக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மாற்றம் தொடர்பான அறிவித்தல் உட்பட மாதிரிப் படங்களும் டுவிட்டர் தளத்தினூடாக வெளியிடப்பட்டுள்ளன.

இவ் வசதியானது டிக் டாக் அப்பிளிக்கேஷனில் பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

எனினும் அதே வசதியானது Snapchat அப்பிளிக்கேஷனில் வரவேற்பினைப் பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

3Shares
Total Page Visits: 70 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *