வாங்குனா இப்படி ஒரு போன் வாங்கணும்; இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம்!

By | August 16, 2020

ரியல்மி நிறுவனம் அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. என்ன மாடல், என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.

அம்சங்களுக்கு ஏற்ற நியாமான விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து தனக்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள ரியல்மி நிறுவனம் அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

அது ரியல்மி 6ஐ மாடல் ஆகும் மற்றும் இது கடந்த மே மாதம் ஐரோப்பாவில் அறிமுகமான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

அவசரப்பட்டு ரெட்மி போன் வாங்க மாட்டேன்னு சபதம் போட்டீங்களா? ஐயோ பாவம்!

இந்தியாவில் உள்ள ஒரு சில்லறை வணிக கடையில், வரவிருக்கும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உள்ளடக்கிய ஒரு போஸ்டரை OnPhones வலைத்தளம் கண்டறிந்துள்ளது.

அதன்படி ரியல்மி 6i ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரும் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி எஸ்ஓசி மற்றும் 48 மெகாபிக்சல் கேமராவுடன் வரும் என்பதும் தெரியவந்துள்ளது.

ரியல்மி 6i ஸ்மார்ட்போன் ஆனது விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற சிங்கிள் மெமரி வேரியண்ட்டின் கீழ் வாங்க கிடைக்கும் என்பதையும் அந்த போஸ்டர் தெரிவிக்கிறது.

அதாவது ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனின் அதே அம்சங்களுடன் ரியல்மி 6ஐ வருகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,510 க்கு அறிமுகமானது. எனவே இதே மாதிரியான ஒரு விலை நிர்ணயத்தை நா இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:

டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு கொண்ட ரியல்மி 6எஸ் ஆனத ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ கொண்டு இயங்குகிறது. இது 6.5 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1080×2400 பிக்சல்கள்) எல்சிடி ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவை, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 90.5 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் போன்றவற்றுடன் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.05GHz மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் 4 ஜிபி ரேம் மற்றும் ஏஆர்எம் ஜி 76 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 64 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரி உள்ளது மற்றும் ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மேலும் விரிவாக்கக்கூடிய ஆதரவினையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

கேமராத்துறையை பொறுத்தவரை, ரியல்மி 6எஸ் க்வாட் கேமரா அமைப்பு செங்குத்தான வடிவமைப்பின் கீழ் அதன் பின் பக்க பேனலின் மேல் இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் 48 மெகாபிக்சல் (எஃப் / 1.8) கேமரா + எஃப் / 2.3 மற்றும் 119 டிகிரி வியூ கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + எஃப் / 2.4 கொண்ட 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் + எஃப் / 2.4 கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை டிஸ்பிளேவின் மேல் இடது விளிம்பில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுக்குள் எஃப் / 2.0 கொண்ட 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

ஹானர் 30 லைட் & ஹானர் X10 மேக்ஸ் அறிமுகம்: நல்லா இருக்கு; வாங்கலாம் போலயே!

இந்த ஸ்மார்ட்போனில் 30W ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு கொண்ட 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பல உள்ளன. அளவீட்டில் ரியல்மி 6எஸ் ஆனது 162.1×74.8×8.9 மிமீ மற்றும் 191 கிராம் எடையும் கொண்டுள்ளது.

0Shares
Total Page Visits: 38 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *