ஜூலை 21 விற்பனை: 8Gb ரேம், 256GB சேமிப்பு வசதி கொண்ட புதிய Realme X2!

By | August 16, 2020

Realme X2 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிற ஜூலை 21 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் 8 ஜிபி ரேம் விருப்பத்துடன் 256 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. இதை ரியல்மி இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.

64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு

ரியல்மி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனானது தற்போது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்தில் கிடைக்கிறது. ரியல்மே எக்ஸ் 2 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போன் கேமிங்-ஃபோகஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC உடன் வருகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பை உள்ளடக்கியது. ரியல்மே எக்ஸ் 2 டால்பி அட்மோஸ் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்

ரியல்மி எக்ஸ் 2., 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுடன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா தளம் வழியாக ஜூலை 21 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று மாதவ் ஷெத் டுவீட் செய்துள்ளார். இருப்பினும், புதிய வேரியண்டின் விலை விவரங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

எதிர்பார்க்ப்படும் விலை

இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 2 விலை 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் ரியல்மி எக்ஸ் 2 4 ஜிபி ரேம் + 64 ஜிபி விலை ரூ. 17,999, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 19,999 மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு விலை ரூ. 20,999 ஆக நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ்2 வடிவமைப்பு

குறிப்பாக ரியல்மி எக்ஸ்2 வடிவமைப்பு மற்றும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே

இந்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும்.

730ஜி சிப்செட் வசதி

ரியல்மி எக்ஸ்2 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இந்த சாதனம் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64எம்பி பிரைமரி கேமரா

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

1Shares
Total Page Visits: 47 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *